படுகர் இனத்தில் முதல் பெண்.. இந்திய ராணுவத்தில் உயர் பொறுப்பு - தமிழகத்தை பெருமைப்படுத்திய ஊட்டி ராணி

x

நீலகிரி மாவட்டம் குன்னூரில் இருந்து முதல் லெப்டினன்ட்டாக, படுக இனத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் ஜம்மு காஷ்மீருக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

உபதலை கிராமத்தை சேர்ந்த மனோகரன் என்பவரின் மகள் பவித்ரா, சென்னை பரங்கிமலையில் உள்ள ராணுவ அதிகாரிகள் பயிற்சி மையத்தில், ஒன்பது மாத பயிற்சி பெற்றார். லெப்டினன்ட்டாக தேர்வு செய்யப்பட்ட இவருக்கு, கடந்த அக்டோபர் மாதம் சென்னையில் நடந்த சத்தியப் பிரமாண நிகழ்ச்சியில், சிறந்த பயிற்சி பெற்றதற்காக வாள் மற்றும் வெள்ளி பதக்கம் வழங்கப்பட்டது. மேலும், குன்னூரில் இருந்து முதல் லெப்டினன்ட்டாக ஜம்மு காஷ்மீருக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார். பணிக்கு செல்வதற்கு முன்பாக நீலகிரிக்கு வருகை தந்த பவித்ராவை, கிராம மக்கள், உறவினர்கள் வரவேற்றனர். அப்போது, ஹாக்கி அமைப்பு சார்பில், ஹாக்கி கோல் பரிசாக வழங்கப்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்