அரியலூரில் முதன்முறையாக செல்லப்பிராணிகள் கண்காட்சி..!

x

அரியலூரில் முதன்முறையாக நடைபெற்ற செல்லப் பிராணிகளுக்கான கண்காட்சியில் ஏராளமான வளர்ப்பு நாய்கள் பங்கேற்றன. கால்நடைத் துறை சார்பில் நடத்தப்பட்ட இந்த கண்காட்சியில் பொமரேனியன், டால்மேஷன், ஜெர்மன் ஷெப்பர்ட் உள்ளிட்ட 58 வெளிநாட்டு நாய் இனங்களும், ராஜபாளையம், கன்னி கோப்பை, சிப்பி பாறை உள்ளிட்ட 14 நாட்டு நாய் இனங்களும் உற்சாகமாக பங்கெடுத்தன. இதில் காவல்துறை சார்பில் பங்கேற்ற நாய்கள் சாகசங்கள் செய்து அசத்திய நிலையில், வெற்றி பெற்ற செல்லப்பிராணிகளின் உரிமையாளர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.


Next Story

மேலும் செய்திகள்