தமிழகத்தில் முதல்முறை..! ரயில்வேயை ஓவர்டேக் செய்து பொதுப்பணித்துறை சாதனை

x

தமிழ்நாட்டில் முதல்முறையாக, புஷ் அண்ட் த்ரோ மூலம் 56 மீட்டர் கல்வெட்டை நெடுஞ்சாலையின் கீழ் பதித்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் அசத்தியுள்ளனர்.

தாம்பரம் - மதுரவாயல் நெடுஞ்சாலையை கடந்து மழைநீர் செல்ல வழி இல்லாததால், சாலையை சேதப்படுத்தாமல் புஷ் துரோ முறையில் சாலையின் கீழ் 54 மீட்டருக்கு கல்வெட்டு கால்வாய் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. ஒரு கல்வெட்டு 11 மீட்டர் நீளமும், ஐந்து மீட்டர் அகலமும், 1 புள்ளி 4 மீட்டர் உயரமும் கொண்டதுபோல் அமைக்கப்பட்டுள்ளது. இந்த கால்வாய் கல்வெட்டின் மீது கனமான இரும்பு அமைக்கப்பட்டு, கம்பரசர் மூலமாக அழுத்தம் கொடுத்து புஷ் அண்ட் துரோ முறையில் ஒன்றன்பின் ஒன்றாக செலுத்தப்பட்டது. ரயில்வே துறையில் மட்டுமே சாத்தியமான இந்த பணியை தற்போது நெடுஞ்சாலை துறை செய்து அசத்தியுள்ளது. இதனிடையே இந்த பணிகளை திடீர் ஆய்வு மேற்கொண்ட கூடுதல் தலைமை செயலர் சந்தீப் சக்சேனா, பணிகளை விரைந்து முடித்து சாலையை பயன்பாட்டிற்கு கொண்டுவர அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.


Next Story

மேலும் செய்திகள்