முதல் நொடி வாக்குப்பதிவு..அடுத்த நொடி வன்முறை..கலவரக்காடாக மாறிய மேற்கு வங்கம்

x

மேற்கு வங்கத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு தொடங்கிய சிறுது நேரத்திலேயே, வன்முறை வெடித்து பலர் கொல்லப்பட்ட சம்பவம் அங்கு பதற்றத்தை ஏற்படுத்தி யுள்ளது. அங்கு என்ன நடக்கிறது என்பதை விவரிக்கிறது இந்த தொகுப்பு....

மேற்கு வங்க மாநிலத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்த நாள் முதலே வெட்டுக்குத்து, வன்முறை, என அம்மாநிலமே கலவரக்காடாக மாறத்தொடங்கியது.

கடந்த 2018 ஆம் ஆண்டில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் திரிணாமூல் காங்கிரஸ் கட்சி 90 சதவீதத்திற்கு மேல் வெற்றிபெற்றது.

கட்சியின் அடித்தளத்தை வலுவாக்கும் உள்ளாட்சி தேர்தலை இந்த முறை விட்டுவிடக்கூடாது என்பதில்

பாஜக, கம்யூனிஸ்ட், காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் தீவிரம் காட்டிவந்தன. இதனால் அரசியல் கட்சிகளுக்கு இடையே வன்முறைகள் சர்வ சாதரணமாக அரங்கேறி வந்தன.

தேர்தல் பிரச்சாரத்தின் போதே, சிறுவன் உட்பட 12 பேர் வன்முறையில் துடிதுடிக்க கொல்லப்பட்டனர். இதனால் தேர்தல் நெருங்க நெருங்க பொதுமக்களுக்கு அச்ச உணர்வும் அதிகரித்தது.

வாக்குப்பதிவு தொடங்கும் முன்தினம், முர்ஷிதாபாத்தில் ஏற்பட்ட வன்முறையில் காங்கிரஸ் உறுப்பினர் கொல்லப் பட்டார். தேர்தல் நடைபெறும் நாள் ரத்தக்கறையுடன் தான் தொடங்கியது.

சுமார் 5 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க தயார் நிலையில் இருக்க, 70 ஆயிரம் காவல்துறையினர், 65 ஆயிரத்திற்கும் மேற்பட்ட துணை ராணுவப்படையினர் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டனர்.

காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில் சிறுது நேரத்திலேயே வன்முறை வெடிக்கத்தொடங்கியது.

கூச்பெகார் மாவட்டத்தில், ஒரு கும்பல், வாக்குப்பெட்டிகளை தூக்கி சென்று உடைத்தும், வாக்குச்சீட்டுகளுக்கு தீ வைத்தும் அத்துமீறி வன்முறையில் ஈடுபட்டுள்ளனர்.

சில பகுதிகளில் துப்பாக்கி சூடு சம்பவங்களும் அரங்கேறியுள்ளதால் மக்கள் வாக்களிக்க செல்லாமல் வீடுகளுக்குள்ளேயே முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

அதே போல் Falimari ஊராட்சியிலும், பாஜக பூத் ஏஜென்டை திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர் குண்டு வீசி கொலை செய்ததாக பாஜக வேட்பாளர் பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

இதே போல், மால்டா மாவட்டத்தில் நடந்த குண்டு வெடிப்பு சம்பவத்தில், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

கூச்பெகார் மாவட்டம் மட்டுமன்றி, Rejinagar, Tufanganj மற்றும் Khargram மாவட்டங்களிலும் வன்முறை வெடித்துள்ளது. இந்த வன்முறை காட்சிகள் வெளியாகியுள்ள நிலையில்,

துணை ராணுவப்படையினரும் போலீசாரும் முறையான பாதுகாப்பு அளிக்க தவறிவிட்டதாக மக்கள் குற்றஞ்சாட்டு கின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்