சென்னை வந்த முதல் விமானம்...வாட்டர் சல்யூட் அடித்து உற்சாக வரவேற்பு

x

மியான்மர்- சென்னை இடையேயான வாராந்திர விமான சேவையின் முதல் விமானத்திற்கு, சென்னை விமான நிலையத்தில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. மியான்மர் - சென்னை இடையேயான வாராந்திர விமான சேவையின் முதல் விமானம், இன்று சென்னை வந்தடைந்தது. சென்னை விமானநிலையத்தில் தரையிறங்கிய அந்த விமானத்திற்கு, தீயணைப்பு வாகனங்கள் மூலம் தண்ணீரை பீய்ச்சியடித்து வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் அந்த விமானத்தில் வந்த பயணிகளுக்கு மலர் தந்து, விமான நிலைய அதிகாரிகள் வரவேற்பளித்தனர்.


Next Story

மேலும் செய்திகள்