138 ஆண்டுக்கு பின் பிறந்த முதல் பெண் குழந்தை... அதிசய தேவதையை கொண்டாடி தீர்க்கும் குடும்பம்!

x

138 ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு குடும்பத்தில் பெண் குழந்தை பிறந்துள்ள அதிசயம் அமெரிக்காவின் மிச்சிகனில் நிகழ்ந்துள்ளது... கரோலின், ஆண்ட்ரூ க்ளார்க் தம்பதிக்கு புனித பாட்ரிக் தினமான மார்ச் 17ல் அழகான பெண் குழந்தை பிறந்தது... அதற்கு பெற்றோர் ஆட்ரி என பெயர் சூட்டி மகிழ்ந்தனர்... இதில் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால் ஆண்ட்ரூவின் குடும்பத்தில் 1885 முதல் பெண் வாரிசே கிடையாதாம்... ஆட்ரி தான் 138 ஆண்டுகளுக்குப் பிறகு பிறந்த அந்த அதிசய பெண் குழந்தையாம்... ஆட்ரியின் வருகையால் அவர்கள் குடும்பமே கொண்டாட்டத்தில் திளைத்துள்ளது...


Next Story

மேலும் செய்திகள்