சந்தை வளாகத்தில் பயங்கர தீ விபத்து - 12 மணி நேரமாக போராடும் தீயணைப்பு வீரர்கள் | Odisha | puri

ஒடிசா மாநிலம் பூரி நகரில் உள்ள சந்தை வளாகத்தில் ஏற்பட்ட தீயை அணைக்கும் பணி, 12 மணி நேரத்தை கடந்து தொடர்ந்து வருகிறது.12 தீயணைப்பு வாகனங்களின் உதவியுடன், 160 தீயணைப்பு வீரர்கள் தீ அணைப்பு பணியில் ஈடுபட்டுள்ள நிலையில், குறுகிய பாதையாக இருப்பதால் தீயை அணைப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனிடையே இந்த தீ விபத்தில் 3 பேர் படுகாயம் அடைந்த நிலையில், அப்பகுதியில் இருந்து 140 சுற்றுலாப் பயணிகள், 100 குடியிருப்புவாசிகள் பத்திரமாக வெளியேற்றப்பட்டுள்ளனர்.  

X

Thanthi TV
www.thanthitv.com