வடமாநில இளைஞர்கள் குடிசையில் தீ..பிளாஸ்டிக், மரக்கட்டை குடோனுக்கு பரவி பயங்கரம்..திருவள்ளூரில் பரபரப்பு

x

திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் அருகே விஜயநல்லூர் பகுதியில் வடமாநில தொழிலாளர்கள் 40க்கும் மேற்பட்டோர் தங்கி இருந்த ஓலை கொட்டகையில் திடீரென தீப்பற்றி மளமளவென எரிந்து குடுசை முழுவதும் நாசமானது. இதில் வடமாநிலத்தவர்கள் யாரும் இல்லாததால் அதிர்ஷ்டவசமாக 40-க்கும் மேற்பட்டோர் உயிர் தப்பினர். மேலும் இந்த தீயானது அருகே இருந்த பழைய பிளாஸ்டிக் மற்றும் மரக்கட்டைகள் குடோனுக்கு பரவி தீ பற்றியதால் கொழுந்து விட்டு எரிந்து வருகிறது. பல லட்சக்கணக்கான மதிப்பிலான பழைய பிளாஸ்டிக் பொருட்கள் மரக்கட்டைகள் எரிந்து வருகிறது. இதுகுறித்து காவல்துறையினருக்கும், தீயணைப்பு துறையினருக்கும் அளித்த தகவலின் அடிப்படையில் விரைந்து வந்த செங்குன்றம் தீயணைப்புத் துறையினர் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். தீ விபத்திற்கான காரணம் குறித்து சோழவரம் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்