பஞ்சாயத்து அலுவலகத்தில் புகுந்து பட்டாசு வெடித்து ஓடிய இளைஞர்-வெடித்து சிதறிய அலுவலகம்

x

தூத்துக்குடி மாவட்டம் வடக்கு இலந்தைகுளம் ஊராட்சி மன்ற அலுவலகத்திற்குள் அத்துமீறி நுழைந்து, பட்டாசு வெடித்த இளைஞரை போலீசார் கைது செய்தனர். வடக்கு இலந்தைகுளம் ஊராட்சி மன்ற தலைவர் கணபதி, அலுவலகத்தை பூட்டி சாவியை அங்கேயே வைத்து விட்டு சென்றுள்ளார். இந்நிலையில், இளைஞர் ஒருவர் அத்துமீறி அலுவலகத்திற்குள் புகுந்து பட்டாசு வெடித்து, அங்குள்ள பொருட்களை சேதப்படுத்தியுள்ளார். இது குறித்த புகாரில், சிசிடிவி காட்சியை வைத்து விசாரித்த வந்த போலீசார், பட்டாசு வெடித்த இளைஞர் மாரிச்செல்வத்தை கைது செய்தனர்.


Next Story

மேலும் செய்திகள்