வணிக வளாகத்தில் திடீரென பயங்கர தீ.. மாலில் பரவியதால் பரபரப்பு - திகு திகுவென கொழுந்து விட்டெரிந்த தீ

மகாராஷ்டிரா மாநிலம் தானே நகரில் உள்ள ஒரு வணிக வளாகத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. அருகில் உள்ள மால் உள்ளிட்ட கட்டடங்களுக்கும் தீ பரவியது. கொழுந்து விட்டு எரிந்த தீயால் அப்பகுதியை கரும்புகை சூழ்ந்தது. தகவலறிந்த தீயணைப்புத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். தீ விபத்துக்கான காரணம் மற்றும் சேத விவரங்கள் குறித்து தெரிவிக்கப்படவில்லை. மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் நிகழ்ந்த இந்த தீ விபத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

X

Thanthi TV
www.thanthitv.com