ஃபைனல் போட்டி.. IPL நிர்வாகம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு

x

சென்னை - குஜராத் அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் இறுதிப் போட்டி மழை காரணமாக இன்றைக்கு மாற்றப்பட்டு உள்ளது.

அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் சென்னை - குஜராத் அணிகளுக்கு இடையே நேற்று இரவு ஐபிஎல் இறுதிப்போட்டி நடைபெற இருந்தது. ஆனால் அகமதாபாத்தில் இடைவிடாது மழை கொட்டித் தீர்த்தது. இதனால் மைதானத்தில் குளம்போல் மழைநீர் தேங்கிய நிலையில், போட்டியை நடத்த முடியாத சூழல் ஏற்பட்டது. இதனையடுத்து, போட்டியை ரிசர்வ் டேவில் நடத்த இரு அணியினருடன் நடுவர்கள் ஆலோசித்த நிலையில், இன்று இரவு 7.30 மணிக்கு இறுதிப்போட்டி நடைபெறும் என ஐபிஎல் நிர்வாகம் அறிவித்து உள்ளது. ஏற்கனவே வாங்கிய டிக்கெட்டுகளை ரசிகர்கள் பத்திரமாக வைத்து இருக்குமாறும், அந்த டிக்கெட்டுகளை இன்று பயன்படுத்திக் கொள்ளுமாறும் ஐபிஎல் நிர்வாகம் தெரிவித்து உள்ளது.


Next Story

மேலும் செய்திகள்