இறுதி வரை போராடி 81 வது நிமிடத்தில் வீழ்ந்த ஜப்பான் - கோஸ்டாரிகா அபாரம்

x

உலக கோப்பை கால்பந்து தொடரில் ஜப்பானை வீழ்த்தி கோஸ்டாரிகா அணி அபார வெற்றி பெற்றது.

குரூப் E பிரிவில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் இரு அணிகள் கடுமையாக போராடியும், முதல் பாதியில் கோல் எதுவும் அடிக்க முடியவில்லை.

இரண்டாவது பாதியில், 81வது நிமிடத்தில் கோஸ்டாரிகா வீர‌ர் கெய்ஸர் புல்லர்(Keysher Fuller) ஒரு கோல் அடித்தார்.

இதனால் கோஸ்டாரிகா முன்னிலை பெற்றது.

ஆனால் ஆட்டத்தின் இறுதி வரை ஜப்பான் வீர‌ர்களால் ஒரு கோல் கூட அடிக்க முடியவில்லை.

இதனால், 1க்கு பூஜ்ஜியம் என்ற கோல் கணக்கில் கோஸ்டாரிகா அணி வெற்றி பெற்றது.


Next Story

மேலும் செய்திகள்