கால்பந்து உலகக்கோப்பை...பரபரப்பான நாக் அவுட் சுற்று - அமெரிக்காவை வீழ்த்தி நெதர்லாந்து அபாரம்

x

உலகக்கோப்பை கால்பந்து தொடரில் நடந்த முதல் நாக் அவுட் சுற்றில், அமெரிக்காவை 3-க்கு ஒன்று என்ற கோல் கணக்கில் வீழ்த்திய நெதர்லாந்து அணி முதல் ஆளாக காலிறுதிக்குள் நுழைந்தது.

தோகாவில் உள்ள கலிஃபா மைதானத்தில் நடந்த, நாக் அவுட் சுற்றின் முதல் ஆட்டத்தில், பலம் வாய்ந்த நெதர்லாந்து அணியை அமெரிக்கா எதிர்கொண்டது.

ஆட்டத்தின் 10வது நிமிடத்தில், நெதர்லாந்து வீரர் மெம்பிஸ் டெபாய் முதல் கோல் அடித்து அமெரிக்காவுக்கு அதிர்ச்சியளித்தார்.

நெதர்லாந்து அணியின் ஆக்ரோஷமான ஆட்டத்திற்கு தடுப்பாட்டத்தால் அமெரிக்கா முட்டுக்கட்டை போட்டது.

இதனைத்தொடர்ந்து முதல் பாதி ஆட்டத்தில் கூடுதல் நேரம் வழங்கப்பட்டது. இதனை சரியாக பயன்படுத்திய நெதர்லாந்து அணி வீரர் பிளிண்ட் 2வது கோலை பதிவு செய்தார்.

இதனால் முதல் பாதியில் 2-0 என்ற கோல் கணக்கில் நெதர்லாந்து முன்னிலை பெற்றது.


Next Story

மேலும் செய்திகள்