ஃபிபா கால்பந்து உலகக்கோப்பை தொடர் - நடப்பு சாம்பியன் பிரான்சை வீழ்த்திய துனிசியா

ஃபிபா கால்பந்து உலகக்கோப்பை தொடர் - நடப்பு சாம்பியன் பிரான்சை வீழ்த்திய துனிசியா
x

ஃபிபா கால்பந்து உலகக்கோப்பை தொடரின், 'டி' பிரிவில் நடைபெற்ற போட்டியில், துனிசியா மற்றும் பிரான்ஸ் அணிகள் மோதின.

ஆட்டத்தின் முதல் பாதியில் இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை. இரண்டாவது பாதியின் 58-வது நிமிடத்தில் துனிசியா வீரர் வாக்பி காசரி முதல் கோலை அடித்தார்.

அதைத்தொடர்ந்து 2 அணிகளும் கோல் எதுவும் அடிக்காத நிலை, ஒன்றுக்கு பூஜ்ஜியம் என்ற கோல் கணக்கில், நடப்பு சாம்பியன் பிரான்ஸ் அணியை வீழ்த்தி துனிசியா அதிர்ச்சி அளித்தது.

பிரான்சை வீழ்த்திய ஆறுதலுடன் துனிசியா வெளியேறிய நிலையில், 'டி' பிரிவில் 6 புள்ளிகளுடன் பிரான்ஸ் அணி 2-வது சுற்றுக்கு முன்னேறியது.


Next Story

மேலும் செய்திகள்