ஃபிபா கால்பந்து உலகக்கோப்பை தொடர் - டென்மார்க்கை வீழ்த்தி 2-வது சுற்றுக்கு முன்னேறிய ஆஸி

ஃபிபா கால்பந்து உலகக்கோப்பை தொடர் - டென்மார்க்கை வீழ்த்தி 2-வது சுற்றுக்கு முன்னேறிய ஆஸி
x

ஃபிபா உலகக்கோப்பை கால்பந்து தொடரின் 'டி' பிரிவின் மற்றொரு போட்டியில் ஆஸ்திரேலியா மற்றும் டென்மார்க் அணிகள் மோதின.

முதல் பாதியில் கோல்கள் ஏதும் விழாத நிலையில், இரண்டாவது பாதியின் 60-வது நிமிடத்தில் ஆஸ்திரேலியாவின் மேத்யூ லெக்கி கோல் அடித்தார்.

இறுதியில் ஒன்றுக்கு பூஜ்ஜியம் என்ற கோல்கணக்கில், டென்மார்க்கை ஆஸ்திரேலிய அணி வீழ்த்தியது.

இதன்மூலம் 'டி' பிரிவில் பிரான்சை தொடர்ந்து ஆஸ்திரேலிய அணியும் காலிறுதிக்கு முந்தைய 2-வது சுற்றுக்கு தகுதி பெற்றது.


Next Story

மேலும் செய்திகள்