நகர மன்ற கூட்டத்தில் திமுகவினரிடையே கடும் மோதல் - ராமநாதபுரத்தில் பரபரப்பு | Ramanathapuram | DMK

x

ராமநாதபுரத்தில் திமுகவினரிடையே ஏற்பட்ட மோதலால், 2 பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இராமநாதபுரம் நகராட்சி சார்பில், நகர மன்ற கூட்டம், அதன் தலைவர் திமுகவைச்சேர்ந்த கார்மேகம் தலைமையில் நடைபெற்றது. அப் போது, 10ஆவது வார்டு பகுதியில், பொதுமக்களின் எதிர்ப்பை மீறி நகராட்சி சார்பில் புதிதாக வேலி அமைப்பதாக அந்த வார்டின் திமுக கவுன்சிலர் காளிதாஸ் கூறினார். இது தொடர்பாக, இருதரப்பிற்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாக தெரிகிறது. அதைத் தொடர்ந்து, நகர்மன்றத் தலைவரின் ஆட்கள், தனது வீட்டுக்கு வந்து தாக்கியதாக, அரசு மருத்துவமனையில் காளிதாஸ் சிகிச்சை பெற்று வருகிறார். இதேபோல், காளிதாஸ் தாக்கியதாக நகர்மன்றத் தலைவரின் உறவினர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்