பெண் யூட்யூபர் சடலமாக மீட்பு | Youtuber | Priyolina Nath | Sanggi Vlogs | ThanthiTV

x

அசாமில் பிரபல பெண் யூட்யூபர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது...

ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட சப்ஸ்கிரைபர்களை கொண்ட சங்க்கி விலாக்ஸ் என்ற யூட்யூப் சேனலை நடத்தி வருபவர் பிரியோலினா நாத் (Priyolina Nath). இவர் தன் யூட்யூப் சேனலில் வெளியிடும் வீடியோக்கள் அதிகளவிலான பார்வைகளை தாண்டும். இவருக்கு 3 மாதங்களுக்கு முன்பாக பங்கஜ் நாத் என்பவருடன் திருமணம் நடந்ததாகவும் கூறப்படுகிறது. இதனிடையே இவர் கவுகாத்தியில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இவர் கொலை செய்யப்பட்டாரா? தற்கொலை செய்து கொண்டாரா? என்ற கேள்வி எழுந்திருக்கும் நிலையில் கணவர் மீது சந்தேகம் எழுப்பும் உறவினர்கள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்