மகளிடம் அத்துமீறிய காமுகன்.. நண்பரோடு செய்த அதிர்ச்சி சம்பவம்

கேரளா மாநிலம் இடுக்கி மாவட்டத்தை சேர்ந்தவர் 17 வயது சிறுமி. இவரின் தாய் வெளிநாட்டில் தங்கி பணிபுரிந்து வரும் நிலையில், தனது தந்தையுடன் வசித்து வந்துள்ளார். சிறுமியின் தந்தை மதுவுக்கு அடிமையான நிலையில், மகளுக்கு அடிக்கடி பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது. சம்பவத்தன்று, தனது நண்பருடன் மதுபோதையில் வீட்டிற்கு வந்த அவர், நண்பருடன் சேர்ந்து மகளுக்கு கூட்டு பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது குறித்த தாயிடம் தெரிவித்த சிறுமி, போலீசில் புகாரளித்துள்ளார். இது குறித்து விசாரணை நடத்தி வந்த போலீசார் சிறுமியின் தந்தை மற்றும் அவருடைய நண்பரை போக்சோவில் கைது செய்த நிலையில், இருவரையும் சிறையில் அடைத்தனர்.

X

Thanthi TV
www.thanthitv.com