கேரள வாகனங்களை சிறைபிடித்த விவசாயிகள்

மடத்துக்குளம் அருகே சங்கராமநல்லூர் பேரூராட்சிக்குட்பட்ட பகுதியில் குட்டையன்குளம் உள்ளது. இந்தக் குளத்தில் அதிகாலையில், 3 கேரள சரக்கு வாகனங்கள், கோழிக்கழிவுகளை கொட்டின. இதைக் கண்ட அப்பகுதி விவசாயிகள், வாகனங்களை சிறைபிடித்தனர். சம்பவ இடத்திற்கு போலீசார் மற்றும் அதிகாரிகள் வந்து விசாரணை நடத்தினர். குளத்தில் மீன் வளர்க்கும் ஒப்பந்ததாரர், மீனுக்கு உணவாக கோழிக்கழிவுகளை கொட்டுவதற்காக அழைத்ததாக, கேரள வாகன ஓட்டுநர்கள் தெரிவித்தனர். இதையடுத்து, விவசாயிகள் வற்புறுத்தலின்பேரில், குளத்தில் கொட்டப்பட்ட கழிவுகளை, மீண்டும் அள்ளி வாகனத்தில் ஏற்றினர். சுகாதார சீர்கேடு ஏற்படுத்தும் வகையில் செயல்பட்ட 3 கேரள வாகனங்களுக்கு, பேரூராட்சி நிர்வாகம் தலா 5 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தது.

X

Thanthi TV
www.thanthitv.com