10 நாட்கள் தொடர் உண்ணாவிரதம்..விவசாயி மருத்துவமனையில் அனுமதி - நெல்லையில் பரபரப்பு

x

நெல்லை மாவட்டம், விஜயநாராயணம் பகுதி பெரியகுளத்தில் மராமத்து பணி செய்ய வேண்டுமெனக் கோரி விவசாயிகள் உண்ணாவிரத போராட்டம் மேற்கொண்டுள்ளனர். இந்த குளத்தை சீரமைக்க வேண்டுமெனவும், அணைக்கட்டாக தரம் உயர்த்த வேண்டுமெனவும் நீண்ட நாள்களாக விவசாயிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். மேலும், இந்த குளம் தூர்வாரி சீரமைக்கப்படும் எனவும் திமுக தேர்தல் வாக்குறுதியில் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்நிலையில், குளம் சீரமைக்கப்படாமல் இருப்பதால் விவசாயிகள் தொடர்ந்து 10 நாள்களாக உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்