போலீசார் நடத்திய அதிரடி என்கவுன்டர்..பிரபல கேங்ஸ்டர் சுட்டுக்கொலை - உ.பியில் பரபரப்பு

x

உ.பி.யின் டாப் 65 மாஃபியாக்களின் பட்டியலை உ.பி அரசு அலுவலகம் சில நாட்களுக்கு முன் வெளியிட்டது. இதில் கிரேட்டர் நொய்டாவை சேர்ந்த அனில் துஜானாவின் பெயர் இடம் பெற்றுள்ளது. பிரபல கேங்க்ஸ்டர் அனில் துஜானா நீண்ட காலமாக டெல்லி திகார் சிறையில் இருந்தார். ஆனால் சில காலத்திற்கு முன்பு ஜாமீனில் வெளியே வந்தார்.

அனில் துஜானா மீது உ.பி. உள்ளிட்ட பிற மாநிலங்களில் கொலை, மிரட்டி பணம் பறித்தல் போன்ற 60 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மீரட்டில் உத்தரபிரதேச காவல்துறையின் சிறப்பு அதிரடிப்படை நடத்திய என்கவுன்டரில் அனில் துஜானா கொல்லப்பட்டார்.


Next Story

மேலும் செய்திகள்