பிரபல நடிகர் பிருத்விராஜுக்கு காலில் காயம்..இன்று அறுவை சிகிச்சை

x

படப்பிடிப்பின் போது நடிகர் பிருத்விராஜிக்கு காலில் காயம் ஏற்பட்ட நிலையில், கொச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் இன்று அறுவை சிகிச்சை செய்யப்படுகிறது.பிருத்விராஜ் நடிக்கும் 'விளையாட்டு புத்தர்' படத்தின் படப்பிடிப்பு கேரள மாநிலம் மறையூரில் நடைபெற்று வருகிறது. சண்டை காட்சியின் போது, எதிர்பாராத விதமாக பிருத்விராஜிக்கு காலில் காயம் ஏற்பட்டது. அருகே உள்ள தனியார் மருத்துவமனையில் பிருத்விராஜிக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்ட பிறகு, கொச்சிக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அவருக்கு இன்று அறுவை சிகிச்சை செய்யப்படுவதாக, மருத்துவர்கள் தெரிவித்தனர்.


Next Story

மேலும் செய்திகள்