சுகாதார நிலையம் அமைக்க நிலத்தை தானமாக தந்த குடும்பம் - குவியும் பாராட்டுகள்

x

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே துணை சுகாதார நிலையம் அமைக்க 25 லட்ச ரூபாய் மதிப்பிலான நிலத்தை தானமாக வழங்கிய குடும்பத்திற்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன. உதயேந்திரம் பேரூராட்சியில் அரசு துணை சுகாதார நிலையம் அமைக்க, 35 லட்ச ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது. இருப்பினும், சுகாதார நிலையம் அமைக்க அப்பகுதியில் அரசு நிலம் இல்லாத நிலையில், அதே கிராமத்தை சேர்ந்த அண்ணபூரணி-ராஜ்குமார் குடும்பத்தார், தங்களுக்கு சொந்தமான 25 லட்சம் மதிப்பிலான நிலத்தை தானமாக வழங்கினர். இதனையடுத்து, குடும்பத்தாரை எம்எல்ஏ செந்தில்குமார் உள்ளிட்ட அதிகாரிகள் நேரில் சென்று பாராட்டினர்.


Next Story

மேலும் செய்திகள்