மான்கறி கடத்தி சென்றதாக பொய் வழக்கு - வனத்துறை அதிகாரிகள் அதிரடி கைது

x

கேரளாவில் மான்கறி கடத்தியதாக கூறி பழங்குடி இளைஞர் மீது பொய்வழக்கு பதிவு செய்த இரு வனத்துறை அதிகாரிகள் கைது செய்யப்பட்டனர்.

கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்திலுள்ள கண்ணம்பாடி புத்தன்புரக்கல் பகுதியை சேர்ந்தவர் சருண் சாஜி. பழங்குடி இளைஞரான இவர் மீது, கடந்த வருடம் செப்டம்பர் மாதம் ஆட்டோவில் மான் இறைச்சி கடத்தியதாக கூறி சிங்குகாணம் வனத்துறை அதிகாரிகள் வழக்கு பதிவு செய்தனர். பல கட்ட போராடத்திற்கு பின்பு இளைஞர் கொண்டு சென்றது மாட்டிறைச்சி என தெரியவர, பொய் வழக்கு பதிவு செய்த 7 வனத்துறை அதிகாரிகள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். இந்நிலையில், கடந்த வருடம் டிசம்பர் மாதம் 13 வனத்துறை அதிகாரிகள் மீது சாதி வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்குபதிவு செய்யப்பட்டது. இதில், அனைவருடைய முன்ஜாமீன் மனுக்களும் நீதிமன்றத்தில் நிராகரிக்கப்பட்ட நிலையில், வனத்துறை அதிகாரி லெனினை திருவனந்தபுரத்தில் போலீசார் கைது செய்தனர். முக்கிய குற்றவாளியாக கருதப்பட்ட அனில்குமார் காவல் நிலையத்தில் சரணடைந்தார். மற்ற வனத்துறை அதிகாரிகளை கைது செய்யும் நடவடிக்கையில் போலீசார் இறங்கியுள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்