போலி ரிசல்ட் வெளியீடு.. - TNPSC எச்சரிக்கை

ஒருங்கிணைந்த பொறியியல் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டு விட்டதாக பரவும், போலியான தகவல்களை நம்ப வேண்டாம் என டி.என்.பி.எஸ்.சி கேட்டுக் கொண்டுள்ளது.

இது தொடர்பாக டி.என்.பி.எஸ்.சி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், ஒருங்கிணைந்த பொறியியல் பணிகளில் அடங்கிய பதவிகளுக்கான தேர்வு முடிவுகள் குறித்து, சமூக வலைதளங்களில் பரவி வரும் போலியான பட்டியலை நம்ப வேண்டாம் என கேட்டுக்கொண்டுள்ளது.

மேலும், வேலை வாங்கி தருவதாக கூறும் இடைத்தரர்களிடம் ஏமாற வேண்டாம் எனவும் டி.என்.பி.எஸ்.சி எச்சரித்துள்ளது.

X

Thanthi TV
www.thanthitv.com