ஓலை கொட்டகையில் கள்ளத்தனமாக மதுவிற்பனை..தந்தி டிவி செய்தி எதிரொலியால்...

x

இளையாங்குடி அருகே உள்ள சாலை கிராமத்தில், மதுபானகடை அருகே, ஓலை கொட்டகை போட்டு ஒருவர் மதுபானங்களை விற்றுக் கொண்டிருந்தார்.இது குறித்த செய்தி தந்தி டிவியில் ஞாயிறன்று ஒளிபரப்பானது.இது பேசு பொருளாக மாறிய நிலையில், அங்கு செயல்பட்டு வந்த இரண்டு மதுபான பார்களுக்கு உடனடியாக சீல் வைக்கப்பட்டது. மது விற்பனையில் ஈடுபட்ட ராஜா என்பவரை கைது செய்து, போலீசார் சிறையில் அடைத்தனர். மற்றொரு குற்றவாளியான ராமச்சந்திரன் தேடி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்