வாகன சோதனையில் கட்டுக்கட்டாக சிக்கிய கள்ள நோட்டுகள் பறிமுதல் - இரு பெண்கள் உட்பட 7 பேர் கைது

x

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் பகுதிகளில் இரண்டாயிரம் ரூபாய் கள்ள நோட்டுகளை புழக்கத்தில் விட வந்த இரண்டு பெண்கள் உட்பட ஏழு பேரை கைது செய்யப்பட்டனர். களப்பாகுளம் பகுதியில் காவல் ஆய்வாளர் மாதவன் தலைமையிலான் காவல்துறையினர் வாகன சோதனை நடத்தினர். அப்போது, அவ்வழியாக வந்த காரை மறித்து சோதனை செய்த போது அதில் இருந்த இரண்டு பேர் காரை விட்டு இறங்கி ஓடினர். அவர்களை விரட்டி பிடித்த போலீசார், காரில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 38 லட்சம் ரொக்கப்பணத்தை பறிமுதல் செய்தனர். இரண்டாயிரம் ரூபாய் கள்ள நோட்டுகள், இரண்டு சொகுசு கார்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர். இதனைதொடர்ந்து வளர்மதி, கிருஷ்ணவேணி, பாலசுப்பிரமணியன், சிராஜ் கரிம், வீரபுத்திரன், சந்தோஷ் உட்பட ஏழு பேரை போலீசார் கைது செய்தனர். விசாரணையில், அனைவரும் சங்கரன்கோவில் பகுதியில் கள்ளநோட்டுகளை புழக்கத்தில் விடுவதற்கு வந்ததாக கூறியுள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்