"ரூ.500, ரூ.200, ரூ.2000 நோட்டுகளில் கள்ள நோட்டுகள்" - ரிசர்வ் வங்கி அதிர்ச்சி ரிப்போர்ட்

x

2022-23ல் கண்டறியப்பட்டுள்ள கள்ள நோட்டுகள் பற்றிய விவரங்களை அலசுகிறது, இந்தத் தொகுப்பு.....

2022-23ல், 500 ரூபாயில் 91,110 கள்ள நோட்டுகள்

கண்டறியப்பட்டுள்ளதாக ரிசர்வ் வங்கியின் ஆண்டறிக்கை கூறுகிறது. 2021-22ல் இது 79,669ஆக இருந்தது.

2,000 ரூபாய் நோட்டுகளில், 9,806 கள்ள நோட்டுகள் கண்டறியப்பட்டுள்ளன. 2021-22ல் இதன் அளவு 13,604ஆக இருந்தது ஒப்பிடத்தக்கது.

200 ரூபாய் நோட்டுகளில், 27,258 கள்ள நோட்டுகள் கண்டறியப்பட்டுள்ளன. 2021-22ல் இதன் அளவு 27,204ஆக இருந்தது.

100 ரூபாய் நோட்டுகளில், 78,699 கள்ள நோட்டுகள் கண்டறியப்பட்டுள்ளன. 2021-22ல் இதன் அளவு 92,237ஆக இருந்தது.

50 ரூபாய் நோட்டுகளில், 17,755 கள்ள நோட்டுகள் கண்டறியப்பட்டுள்ளன. 2021-22ல் இதன் அளவு 17,696ஆக இருந்தது ஒப்பிடத்தக்கது.

அனைத்து வகை ரூபாய் நோட்டுகளில், மொத்தம் 2.25 லட்சம் கள்ள நோட்டுகள் 2022-23ல் கண்டறியப்பட்டுள்ளன. 2021-22ல் இதன் அளவு 2.30 லட்சமாக இருந்தது.

4.6 சதவீத கள்ள நோட்டுகள் ரிசர்வ் வங்கியிலும், 95.4 சதவீத கள்ள நோட்டுகள் இதர வங்கிகளிலும் கண்டறியப்பட்டுள்ளன.


Next Story

மேலும் செய்திகள்