"ஆகஸ்ட் 7ஆம் தேதி தோல்வி..." - பிப்.10ஆம் தேதி வெற்றி பெறுமா?

x

இஸ்ரோவின் சிறிய ரக எஸ்எஸ்எல்வி-டி2 ராக்கெட் நாளை காலை 9.18 மணிக்கு விண்ணில் ஏவப்படவுள்ளது. சர்வதேச விண்வெளி சந்தையில் சிறிய செயற்கைக் கோள்களை ஏவுவதற்கான தேவை அதிகரித்திருப்பதை கருத்தில் கொண்டு, 120 டன் எடை கொண்ட சிறிய ரக எஸ்.எஸ்.எல்.வி ராக்கெட்களை இஸ்ரோ புதிதாக வடிவமைத்து வருகிறது. அதன்படி, சிறிய ரக 2 செயற்கைக் கோள்களுடன் எஸ்எஸ்எல்வி - டி1 ராக்கெட் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 7ஆம் தேதி விண்ணில் ஏவப்பட்டது. ஆனால், அந்த ராக்கெட் தவறான சுற்றுப்பாதையில் நிலை நிறுத்தப்பட்டதால், தோல்வியில் முடிந்தது. தற்போது, புதிதாக எஸ்எஸ்எல்வி- டி2 ராக்கெட்டை வடிவமைத்துள்ள இஸ்ரோ, நாளை காலை 9.18 மணிக்கு விண்ணில் செலுத்த திட்டமிட்டுள்ளது. இந்த ராக்கெட்டை ஏவுதளத்தில் நிறுத்தி, இறுதிக் கட்ட சோதனையில் இஸ்ரோ விஞ்ஞானிகள் ஈடுபட்டு வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்