அரசியல் தலைவர்களை கலாய்க்கவே உருவாக்கப்பட்ட பேஸ்புக் பக்கங்கள்.. பிரதமர் மோடியை குறி வைக்கும் பேஜ்

x

முக்கிய அரசியல் தலைவர்களுக்கு எதிராக பேஸ்புக்கில் பெரும் செலவில் விளம்பரங்கள் செய்யப்படுவது அதிகரித்துள்ளது. இதன் பின்னணி பற்றி இந்தத் தொகுப்பு விவரிக்கிறது

பிரபல சமூக ஊடகமான பேஸ்புக்கை இந்தியாவில் 54கோடி பேர் பயன்படுத்துகின்றனர். அனைத்து அரசியல் கட்சிகளும், இதை பிரச்சார தளமாக பயன்படுத்தி வருகின்றன.

மத்திய பிரதேச சட்டமன்ற தேர்தல் விரைவில் நடைபெற உள்ள நிலையில், ஜூன் 15 முதல் ஜூலை 14 வரை CorruptionNath என்ற பெயர் கொண்ட பேஸ்புக் பக்கம்

விளம்பரங்களுக்கு 22.42 லட்சம் ரூபாய் செலவு செய்துள்ளதாக பேஸ்புக் விளம்பர நூலக அறிக்கை கூறுகிறது.

மத்திய பிரதேச காங்கிரஸ் தலைவரும், முன்னாள் முதல்வருமான கமல் நாத் மீது பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகள் அடங்கிய 762 விளம்பரங்களை இந்த பேஸ்புக் பக்கம் வெளியிட்டுள்ளது.

ஆம் ஆத்மி கட்சி தலைவரும், டெல்லி முதல்வருமான அரவிந்த் கேஜ்ரிவால் மீது அவதூறான விளம்பரங்களை வெளியிடும் ஏக் தோக்கோ கெஜ்ரிவானே என்ற பேஸ்புக் பக்கம்

இதுவரை 3.19 கோடி ரூபாய் செலவில் 914 விளம்பரங்களை வெளியிட்டுள்ளது.

பிரதமர் மோடி பற்றி எதிர்மறையான விளம்பரங்களை வெளியிடும் கோட்டிகரோக் மோடி என்ற பேஸ்புக் பக்கம்,

இதுவரை 1.49 கோடி ரூபாய் செலவில், 1,629 விளம்பரங்களை வெளியிட்டுள்ளது.

சுண்ட்டி எக்ஸ்பிரெஸ் என்ற பேஸ்புக் பக்கம், இதுவரை 8 கோடி ரூபாய் செலவில், 3,877 விளம்பரங்களை அரவிந்த் கெஜ்ரிவாலை அவதூறு செய்து வெளியிட்டுள்ளது.

புவா பாபுவா என்ற பேஸ்புக் பக்கம், ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி மற்றும் அகிலேஷ் யாதவ் ஆகிய மூவரையும் குறி வைத்து, அவதூறான விளம்பரங்களை வெளியிட்டு வருகிறது.

இதுவரை இந்த பக்கத்தில் 4.88 கோடி ரூபாய் செலவில், 4,059 விளம்பரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

டி.என் டிசர்வர்ஸ் பெட்டர் என்ற பேஸ்புக் பக்கம், பாஜக மற்றும் அதிமுக தலைவர்களுக்கு எதிராக, இதுவரை 46 லட்சம் ரூபாய் செலவில் 769 விளம்பரங்களை வெளியிட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்