சென்னையில் பைக்கில் லிப்ட் கேட்டு சென்றவருக்கு நேர்ந்த உச்சகட்ட கொடுமை.. உஷார்.. உஷார்..!

x

சென்னை கொருக்குப்பேட்டையில், லிப்ட் கொடுப்பது போல் நடித்து, இளைஞரை தாக்கி பணம் பறித்ததாக, மூன்று பேர் கைது செய்யப்பட்டனர்.


கொருக்குப்பேட்டை ஜேஜே நகரைச் சேர்ந்த சீனிவாசன் என்பவர், இரவு பணி முடிந்து தண்டையார்பேட்டை மேம்பாலம் வழியாக வந்த போது, இருசக்கர வாகனத்தில் வந்த இருவரிடம் லிப்ட் கேட்டதாக தெரிகிறது. இருசக்கர வாகனத்தில் ஏற்றிக் கொண்டு சிறிது தூரம் சென்ற பிறகு, மற்றொருவரை வரவழைத்து சீனிவாசனை சரமாரியாக தாக்கியதுடன், அவரிடம் இருந்து ஆயிரத்து 500 ரூபாய் பணத்தை பறித்துச் சென்றதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக, ஆர்.கே. நகர் காவல் நிலையத்தில் சீனிவாசன் புகார் அளித்தார். அதன் பேரில் விசாரணை நடத்திய போலீசார், கல்லூரி மாணவன் உள்பட மூன்று பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.


Next Story

மேலும் செய்திகள்