"அவகிட்ட சந்தோஷத்துக்கு போகல.." - சாகும் முன் மனைவியிடம் குற்றவுணர்ச்சியில் பேசிய கணவன்

x

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே நைனார் பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் ரமேஷ். மளிகை கடை நடத்தி வரும் இவருக்கு, திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில், இவருக்கும் அதே கிராமத்தை சேர்ந்த கோமதி என்பவருக்கும் தகாத உறவு இருந்து வந்துள்ளது. இதில் கோமதிக்கு ஏற்கனவே திருமணமான நிலையில், அவரிடம் நெருங்கி பழகிய ரமேஷ், சுமார் 23 லட்சம் ரூபாய் பணம் மற்றும் 13 சவரன் தங்க நகைகளை வழங்கியதாக கூறப்படுகிறது. இதற்கிடையே, கோமதியின் நடத்தையில் திடீரென மாற்றம் ஏற்பட, அவர் லோகநாதன் என்பவருடன் நெருங்கி பழகி வருவது ரமேஷிற்கு தெரியவந்துள்ளது. இதனால், கோமதியிடம் தகராறில் ஈடுபட்டதோடு, கொடுத்த பணம் மற்றும் நகையினை ரமேஷ் திரும்ப கேட்டுள்ளார். இதற்கு கோமதி தர மறுக்கவே, தொடர்ந்து வற்புறுத்தினால் குடும்பத்தை கொலை செய்து விடுவேன் என மிரட்டியதாக கூறப்படுகிறது. இந்நிலையில், கடும் மன உளைச்சலுக்கு ஆளான ரமேஷ், ஆடியோ ஒன்றை வெளியிட்டு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்