"குழந்தைக்கு காலாவதியான தடுப்பூசி" - தீவிர விசாரணையில் போலீசார்

x

சென்னையில் 3 மாத குழந்தைக்கு காலாவதியான தடுப்பூசி செலுத்தியதாக காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டதை தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.


சென்னை, கொடுங்கையூரை சேர்ந்தவர் அழகுராஜ். இவரின் 3 மாத குழந்தைக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பாக தனியார் மருத்துவமனையில் தடுப்பூசி செலுத்தி உள்ளனர். அப்போது கடந்த நவம்பர் மாதம் காலாவதியான தடுப்பூசியை செலுத்தியது தெரியவந்தது.


உடனே அழகுராஜ் தன் குழந்தையை அழைத்துக் கொண்டு மருத்துவமனைக்கு சென்ற நிலையில் அவர்கள் உரிய பதில் அளிக்கவில்லை என தெரிகிறது. இதையடுத்து அவர் கொடுங்கையூர் காவல் நிலையத்தில் புகார் அளித்ததை தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்