நோட்டம் விட்டு விலையுர்ந்த பைக்குகள் திருட்டு .. போலீசார் விசாரைணயில் பகீர் தகவல்!

x

புதுச்சேரியில், வழக்கு செலவிற்காக இரு சக்கர வாகனத்தை திருடிய இருவரை போலீசார் கைது செய்தனர். புதுச்சேரி, சின்னகாலாப்பட்டு பகுதியைச் சேர்ந்தவர் முருகன். இவர், தனது இருசக்கர வாகனத்தை தன் வீட்டின் முன்பு நிறுத்தி வைத்திருந்தபோது அடையாளம் தெரியாத நபர்கள் அதனை திருடிச் சென்றனர். இது குறித்து சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போது, அதே பகுதியைச் சேர்ந்த மணி மற்றும் ஆகாஷ் ஆகிய இருவர், இருசக்கர வானகத்தை திருடிச் சென்றது கண்டறியப்பட்டது. இதையடுத்து, சுமார் ஒன்றரை மாதம் தலைமறைவாக இருந்த இருவரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் மேற்கொண்ட விசாரனையில், மணி மீது நிலுவையில் உள்ள வழக்கிற்கு செலவு செய்ய பணம் தேவைப்பட்டதால் இரு சக்கர வாகனத்தை திருடியதாக கூறியுள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்