ஆதிச்சநல்லூரில் அகழாய்வில்... 100 ஆண்டுகளுக்குப் பிறகு அரிய பொருள்| தொல்லியல் ஆய்வாளர்கள் மகிழ்ச்சி

x

ஆதிச்சநல்லூரில் அகழாய்வில்... 100 ஆண்டுகளுக்குப் பிறகு அரிய பொருள்| தொல்லியல் ஆய்வாளர்கள் மகிழ்ச்சி


தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகே தாமிரபரணி ஆற்றங்கரையில் ஆதிச்சநல்லூரில் 3 இடங்களில், தொல்லியல் அகழாய்வுப் பணிகள் நடைபெற்று வருகின்றன.


இந்த இடங்களில் இருந்து இதுவரை 90 முதுமக்கள் தாழிகள் கண்டுபிடிக்கப்பட்டன. ஆதிச்சநல்லூரில் சி சைட் எனப்படும் இடத்தில் தற்போது, தங்கத்தால் ஆன நெற்றிப் பட்டயம், வெண்கல வடிகட்டி, 2 கிண்ணம் தாங்கியுடன் அலங்கார கிண்ணன் ஆகியவற்றை ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.


இவை தவிர, 18 இரும்பு பொருள்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அந்த இடத்தில் இருந்து 100 ஆண்டுகளுக்கு முன்பு தங்கத்தால் ஆன காதணி கண்டுபிடிக்கப்பட்டது.


100 ஆண்டுகளுக்குப் பிறகு முதல் முறையாக தங்கம் கிடைத்துள்ளதால் ஆய்வாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்