முன்னாள் வன்னியர் சங்க நகர செயலாளர் கொலை வழக்கு-பழி தீர்க்க திட்டம் தீட்டிய கும்பல்...

x

மயிலாடுதுறையில் வன்னியர் சங்க முன்னாள் நகர செயலாளர் கொலை செய்யப்பட்டதற்கு பழி தீர்க்கும் விதமாக ஆயுதங்களுடன் திட்டம் தீட்டிய கும்பல்களில் 5 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

மயிலாடு துறை அருகில் உள்ள தருமபுரம் பகுதியில் மர்ம நபர்கள் ஆயுதங்களுடன் தங்கி இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் அங்கு இருந்த 16 நபர்களை சுற்றி வளைத்தனர்.

போலீசாரை கண்டு அதிர்ச்சியடைந்து பதறிய ஓடிய அக்கும்பல்களில் 5 பேரை போலீசார் கைது செய்தனர்.

அவர்களிடம் இருந்த நாட்டு வெடிகுண்டுகள் மற்றும் ஆயுதங்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், கடந்த ஆகஸ்ட் மாதம் மயிலாடுதுறையில் முன்னாள் வன்னிய சங்க ரகர செயலாளர் கண்ணன் முன் விரோதம் காரணமாக கொலை செய்யப்பட்டுள்ளார்.

இந்த கொலையில் 22 பேர் கைது செய்யப்பட்டு, சிலர் நிபந்தனை ஜாமினில் வெளியே இருப்பதும் தெரியவந்துள்ளது.

இந்த கொலைக்கு பழி வாங்கும் விதமாக அக்கும்பல் திட்டம் தீட்டி கூடியிருந்தது விசாரணையில் அம்பலமானது.

இதையடுத்து, கைது செய்யப்பட்ட 5 பேரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.

மேலும், தப்பியோடியவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்