இப்படி பிடிச்சு..இப்படி வெட்டு கா..கை பிடித்து கற்று கொடுத்த முன்னாள் MLA

x

தண்ணீர் பந்தல் திறப்பு விழாவில், முன்னாள் அமைச்சர் வளர்மதிக்கு, அதிமுக முன்னாள் எம்எல்ஏ கே.பி.கந்தன் தர்பூசணியை வெட்ட கற்று கொடுத்தார். குன்றத்தூர் கிழக்கு ஒன்றிய அதிமுக சார்பில் கெருகம்பாக்கம் பகுதியில் தண்ணீர் பந்தல் திறப்பு விழா நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு, முன்னாள் அமைச்சர் வளர்மதி தண்ணீர் பந்தலை திறந்து வைத்தார்.அப்போது அங்கிருந்த தர்பூசணியை கத்தியால் பலமுறை வெட்ட முயன்றும் வெட்ட முடியாமல் போனது. அப்போது அருகில் இருந்த கே.பி.கந்தன், வளர்மதியின் கையில் கத்தியை கொடுத்து அவரது கையை பிடித்து குழந்தைகள் பிறந்தநாள் கேக் வெட்டுவது போன்று தர்பூசணியை வெட்ட கற்றுக்கொடுத்தார். இது சிரிப்பலையை ஏற்படுத்தியது.


Next Story

மேலும் செய்திகள்