முன்னாள் அமைச்சர்கள் ஊழல் புகார்கள்.. ஆளுநர் - அமித் ஷா சந்திப்பின் புதிய பின்னணி

x

டெல்லி சென்றுள்ள ஆளுநர் ரவி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை இன்று சந்தித்து பேசினார். தமிழக அரசியல் சூழல் குறித்து ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது. முன்னதாக, அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியை பதவி நீக்கம் செய்வதாக ஆளுநர் ரவி கடந்த வாரம் அறிவித்திருந்தார். பின்னர், மத்திய உள்துறை அமைச்சரின் அறிவுறுத்தலைத் தொடர்ந்து, பதவி நீக்கத்தை நிறுத்தி வைப்பதாக தெரிவித்தார். இந்நிலையில், செந்தில்பாலாஜி விவகாரத்தில் அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து, அமித்ஷாவுடன் ஆளுநர் ரவி ஆலோசனை நடத்தியதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளனர். மேலும், அதிமுக முன்னாள் அமைச்சர்கள் விஜயபாஸ்கர், கே.சி. வீரமணி ஆகியோர் தொடர்பான கோப்புகள் குறித்து அமைச்சர் ரகுபதி கூறிய குற்றச்சாட்டுகள் குறித்து ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது.


Next Story

மேலும் செய்திகள்