முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி திலகவதியின் மருமகள் திடீர் கைது

x

கைது செய்து அழைத்து சென்ற போலீசார்.முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியின் மருமகளை கைது செய்து அழைத்து சென்ற போலீசார்.4 மணி நேரமாக வீட்டு காவலில் இருந்த நிலையில் கைது செய்து அழைத்து சென்ற திருமங்கலம் போலீசார்.கணவர் திருமணம் தாண்டிய உறவில் இருப்பதை குடுமத்துடன் சேர்ந்து தட்டிக்கேட்டதால் ஏற்பட்ட தகராறு.

முன்னாள் டி.ஜி.பி திலகவதியின் மகன் பிரபு திலக் என்பவருக்கும், சுருதி என்பவருக்கும் கடந்த 2007-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. அப்போது, வரதட்சணையாக ஒரு கோடி ரூபாய் ரொக்கமும், 170 பவுன் நகையும் சுருதி குடும்பத்தார் வழங்கியுள்ளனர்.அவர்களுக்கு 15 வயதில் ஒரு மகளும் 7 வயதில் ஒரு மகனும் உள்ளனர். சமீபகாலமாக இருவருக்கும் இடையே மனவருத்தம் ஏற்பட்டு பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.

இந்த நிலையில் பிரபு திலக், இந்திரா பிரியதர்ஷ்ணி என்ற பெண் மருத்துவரோடு தொடர்பில் இருப்பதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக ஏற்கனவே சேலம் மாநகரக காவல் ஆணையர் அலுவலகத்தில் ஸ்ருதி புகார் அளித்துள்ளார்.

மேலும் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஸ்ருதி வழக்கு தொடர்த்து உள்ளார்.

இந்நிலையில் கடந்த 25 ஆம் தேதி திருமங்கலம் பகுதியில் உள்ள விஆர் மாலுக்கு ஸ்ருதி தனது குழந்தைகள் மற்றும் பெற்றோர் உடன் சென்ற போது, கணவர் மற்றும் அவரது பெண் தோழி இருவரும் ஜோடியாக வந்துள்ளனர்.

அதனை பார்த்த ஸ்ருதிக்கும், கணவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. ஒரு கட்டத்தில் ஸ்ருதி மற்றும் இந்திரா ஆகியோர் கை கலப்பில் ஈடுபட்டத்தில் இந்திராவிற்கு உடலில் காயம் ஏற்பட்டுள்ளது.

இதில் இருதரப்பும் திருமங்கலம் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ள நிலையில், ஸ்ருதி புகாரின் மீது நடவடிக்கை எடுக்காத நிலையில், போலீசார் ஒருதலைப்பட்சமாக செயல்பட்டு ஸ்ருதியை விசாரணைக்கு அழைத்துள்ளனர். அவர் வருவதாக தெரிவித்த நிலையில், காலை 7.30 மணிக்கே 10க்கும் மேற்பட்ட போலீசார் கேகே நகரில் உள்ள ஸ்ருதி வீட்டிற்குள் புகுந்து கைது செய்து விசாரணைக்காக எனக்கூறி போலீஸ் வாகனத்தில் திருமங்கலம் காவல்நிலையம் அழைத்து சென்றனர்.

ஸ்ருதி அளித்த புகாரின் பேரில் எந்த வித நடவடிக்கையும், எடுக்காமல், அவரது மாமியார் திலகவதி முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி என்பதால் அதிகாரத்தை பயன்படுத்தி, இரண்டு குழந்தைகளோடு, வீட்டில் தனியாக இருக்கும் ஒரு பெண் வீட்டில் போலீசார் நுழைந்து அதிகார துஷ்பிரயோகம் செய்வதாகவும், விசாரணைக்கு தான் வருவதாக தெரிவித்த நிலையில் தீவிரவாதியை பிடிப்பது போல தன்னை போலீசார் நடத்துவதாகவும் ஸ்ருதி வழகறிஞர் சுபபிரியா தெரிவித்துள்ளார்.

போலீசார் முறையாக சம்மன் கொடுக்காமல் கூட ஸ்ருதியை அழைத்து செல்வதாகவும், விஆர் மாலில் தகராறு தொடர்பான கண்காணிப்பு கேமராக்கள் இருக்கும் நிலையில் அதனை ஆய்வு செய்தால் யார் தவறு இழைத்தது தெரியும் எனவும், உடல் நிலை சரியில்லாத நிலையில் அவரை எங்கே அழைத்து செல்கிறார்கள் என்பதை கூட போலீசார் சொல்ல மறுப்பதாக அவரது வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்