முதல் அர்ஜுனா விருது பெற்ற முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் சலீம் துரானி மரணம் | Salim Durani
- இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சலீம் துரானி புற்றுநோய்ப் பாதிப்பால் குஜராத்தில் உள்ள தனது இல்லத்தில் மரணம் அடைந்தார்.
- 88 வயதான சலீம் துரானி, 1960ம் ஆண்டு முதல் 1973ம் ஆண்டு வரை இந்திய கிரிக்கெட் அணியில் விளையாடியவர்.
- அர்ஜுனா விருது பெற்ற முதல் இந்திய கிரிக்கெட் வீரரான துரானி, டெஸ்ட் கிரிக்கெட்டில் 29 போட்டிகளில் விளையாடி ஆயிரத்து 202 ரன்களும் 75 விக்கெட்டுகளையும் வீழ்த்தியவர்.
- இதனிடையே, சலீம் துரானியின் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்து உள்ளார்.
- சலீம் துரானி ஒரு கிரிக்கெட் ஜாம்பவான் என்றும், கிரிக்கெட் உலகில் இந்தியாவின் எழுச்சிக்கு முக்கிய பங்காற்றினார் என்றும் மோடி புகழாரம் சூட்டி உள்ளார்.
Next Story