ஐடி ஆபிஸுக்கு உள்ளேயே MD,CEO-வை வெறி தீர வெட்டி கொன்ற முன்னாள் ஊழியர் - குலைநடுங்க பதற்றத்தில் IT சொர்க்கபுரி பெங்களூரு

x

பணியில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் ஊழியர், ஆத்திரத்தில் அந்நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் மற்றும் சிஇஓவை, வாளால் சரமாரியாக வெட்டிக் கொன்ற பரபரப்பு சம்பவத்தை விளக்குகிறது இந்த தொகுப்பு...

மனதை உலுக்கும் இந்த சம்பவம், பெங்களூருவில் அரங்கேறியுள்ளது.

பெங்களூருவில் இயங்கி வரும் ஏரோனிக்ஸ் இன்டர்நெட் நிறுவனத்தில், மேலாண்மை இயக்குநராக ஃபனீந்திர சுப்ரமணியம் என்பவரும், தலைமை நிர்வாக அதிகாரியாக வினு குமார் என்பவரும் பதவி வகித்து வந்தனர்.

இந்த நிறுவனம் கடந்த ஆண்டுதான் தொடங்கப்பட்ட நிலையில், ஃபெலிக்ஸ் என்பவர், அங்கு பணியாற்றி வந்துள்ளார்.

ஃபெலிக்ஸ் சரிவர பணியாற்றததால், கடந்த சில மாதங்களுக்கு முன்பு அவரை, மேலாண்மை இயக்குநர் ஃபனீந்திர சுப்ரமணியம் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி வினு குமார் ஆகியோர், பணியில் இருந்து நீக்கியுள்ளனர்.

அதன் பின்னர் பணியில் இருந்து நீக்கப்பட்ட ஃபெலிக்ஸ், கடந்த சில நாட்களாக மன உளைச்சலில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

அதனைத் தொடர்ந்து, ஃபெலிக்ஸ் சொந்தமாக தொழில் ஒன்றை தொடங்கி நடத்தி வந்துள்ளார். இதனிடையே, ஃபெலிக்ஸ் நிறுவனத்திற்கு வரும் ஆர்டர்களை, ஏரோனிக்ஸ் இன்டர்நெட் நிறுவனம் தட்டிப் பறித்ததாக சொல்லப்படுகிறது.

இதில் ஆத்திரமடைந்த ஃபெனிக்ஸ், நேராக தான் பணியாற்றிய நிறுவனத்திற்கு சென்று, மேலாண்மை இயக்குநர் ஃபனீந்திர சுப்ரமணியம் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி வினு குமார் ஆகியோரை சந்திக்க வேண்டும் எனக் கூறியுள்ளார்.

இருவரிடமும் பேசிக்கொண்டே இருக்கும்போது, எதிர்பாராத விதமாக ஃபெலிக்ஸ் தான் மறைத்து வைத்திருந்த வாளை எடுத்து, இருவரையும் சரமாரியாக வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பியோடினார்.

இதில் படுகாயம் அடைந்த இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், இருவரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், தப்பியோடிய ஃபெலிக்ஸை தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர்.

இந்த கொடூர கொலை சம்பவத்திற்கு தொழில் போட்டி தான் காரணமா? அல்லது வேறு ஏதும் காரணமா? என்பது, போலீசாரின் முழுமையான விசாரணைக்கு பிறகே வெளிச்சத்திற்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Next Story

மேலும் செய்திகள்