ஒரு போன் போட்ட முன்னாள் டிஜிபி... நடுநடுங்கி போன காங்கேயம் போலீசார் - ஒரே இரவில் முடிந்த வழக்கு

x

முன்னாள் டிஜிபி போன் செய்ததால் அதிர்ச்சியடைந்த காங்கேயம் போலீசார், திருடு போன இருசக்கர வாகனத்தை ஒரே இரவில் மீட்டு ஒப்படைத்துள்ளனர். தமிழ்நாடு காவல்துறையில் கூடுதல் டிஜிபியாக இருந்து ஓய்வு பெற்றவர் நடராஜன். இந்தநிலையில் இவரது ஓட்டுநரின் இருசக்கர வாகனம் மாயமானதாகவும், இந்த விவகாரத்தில் போலீசார் அலட்சியமாக இருந்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் காங்கேயம் காவல் நிலையத்திற்கு போன் செய்த நடராஜன், பணியில் இருந்த உதவி ஆய்வாளரை கடிந்து கொண்டதாக தெரிகிறது. இதனையடுத்து தீவிர தேடுதல் வேட்டையில் இறங்கிய போலீசார், உடனடியாக இருசக்கர வாகனத்தை மீட்டு ஒப்படைத்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்