முன்னாள் கவுன்சிலருக்கு கத்திக்குத்து..சல்லடை போட்டு தேடும் போலீஸ்

கோவை சுண்ணாம்புகாளவாய் டி.டி.சி. காலனி பகுதியை சேர்ந்த முன்னாள் அதிமுக கவுன்சிலர் அபு என்கிற அபுபக்கர், என்பவர், தனது வீட்டிற்கு வெளியே நடந்து சென்று சென்றார். அப்போது, அங்கு வந்த 2 பேர் கொண்ட கும்பல், அபுபக்கரிடம் தகராறில் ஈடுபட்டனர். அதில் ஒரு நபர், தான் மறைத்து வைத்திருந்த கத்தியால், அபுபக்கரை கத்தியால் குத்தினார். அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் வரவே, அந்த நபர்கள் அங்கிருந்து தப்பியோடினர். அதனைத் தொடர்ந்து படுகாயமடைந்த அபுபக்கரை, அக்கம்பகத்தினர் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

X

Thanthi TV
www.thanthitv.com