"கமலிடம் ஆதரவு கேட்க போகிறேன்" - முதல்வர் ஸ்டாலினை சந்தித்த பின் ஈவிகேஎஸ் இளங்கோவன் பேட்டி

கமலிடம் ஆதரவு கேட்க போகிறேன் - முதல்வர் ஸ்டாலினை  சந்தித்த பின் ஈவிகேஎஸ் இளங்கோவன் பேட்டி
x


ஈரோடு கிழக்கு தொகுதி வேட்பாளராக ஈவிகேஎஸ் இளங்கோவனை காங்கிரஸ் தலைமை அறிவித்தது. இச்சூழலில் இன்று கூட்டணி கட்சியான திமுக தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலினை சந்தித்து, ஈவிகேஎஸ் இளங்கோவன் ஆதரவு கேட்டார். இதற்கு பின் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், இதேபோல மதிமுக, விசிக, சிபிஐ, சிபிஎம், கொங்குநாடு கட்சி தலைவர்களையும் சந்தித்து ஆதரவு கேட்கப் போவதாகத் தெரிவித்தார். குறிப்பாக, கூட்டணியில் இல்லாத மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசனை சந்தித்து ஆதரவு கேட்க போவதாகவும் அறிவித்துள்ளார்.

ஏற்கெனவே, கமல்ஹாசன் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியின் ஒற்றுமை யாத்திரையில் பங்கேற்றிருந்தார். அப்போதே கமல் காங்கிரசுடன் கூட்டணி வைக்கப் போகிறார் என்ற பேச்சு எழுந்தது. இச்சூழலில் ஈவிகேஎஸ் இளங்கோவன் இப்படியொரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார். கடந்த சட்டப்பேரவை தேர்தலில் ஈரோடு கிழக்கில் மக்கள் நீதி மய்யம் 10 ஆயிரம் வாக்குகள் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்