ஒவ்வொரு இந்தியன் வீட்டு கதவும் தட்டப்படும்.. இந்த 9 கேள்விகள் கேட்கப்படும்..

x

அடுத்த சென்செஸ் கணக்கெடுப்பில் சேகரிக்கப்பட உள்ள விவரங்கள் பற்றி இந்த தொகுப்பு அலசுகிறது.

இந்தியாவில் பத்தாண்டுகளுக்கு ஒரு முறை மக்கள்தொகை கணக்கெடுக்கப்படுகிறது. ஆனால் 2011க்கு பிறகு, 2021ல் கொரோனா பரவல் காரணமாக சென்செஸ் எடுக்கப்பட வில்லை. விரைவில் அடுத்த சென்செஸ் கணக்கெடுப்பு தொடங்க உள்ளது. இது எலக்ட்ரானிக் முறையில் எடுக்கப்பட உள்ளது.

இதில் ஒவ்வொரு குடிமகனிடம் கேட்கப்பட உள்ள பல்வேறு கேள்விகள் பற்றிய தகவல்களை இந்திய சென்சஸ் அலுவலகம் வெளியிட்டுள்ளது. 6 மதங்கள் பற்றிய தகவல்கள் மட்டுமே சேகரிக்கப்பட உள்ளது. இந்து மதம், இஸ்லாம், கிருஸ்த்துவம், பெளத்தம், சமணம், சீக்கிய மதம் ஆகிய ஆறு மதங்களில் ஏதாவது ஒன்றை ஒருவர் குறிப்பிட, சென்செஸ் படிவத்தில் வகை செய்யப்பட்டுள்ளது.

ஜார்காண்ட், சட்டிஸ்கர், ஒடிசா மாநிலங்களில் உள்ள, இயற்கை வழிபாடு செய்யும் பழங்குடியினர், தங்களின் சரண பிரிவை, தனி மதமாக வகைப்படுத்த பல வருடங்களாக போராடி வருகின்றனர். கர்நாடகாவில் லிங்காதயத் பிரிவினரும் இதே போல கோருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

வாடகை வீட்டில் வசிப்பவரா மற்றும் சொந்த வீடு உள்ளதா என்ற கேள்விகளும் கேட்க்கப்பட உள்ளன. பிளாஸ்டிக் கேன்களில் அடைக்கப்பட்ட குடிநீரை பயன்படுத்துகிறீர்களா, சமையல் எரிவாயு சிலிண்டர் அல்லது குழாய்கள் மூலம் விநியோகிக்கப்படும் உயர் அழுத்த இயற்கை எரிவாயுவை பயன்படுத்துகிறீர்களா என்ற கேள்விக்கும் பதில் சொல்ல வேண்டும்.

உங்கள் வீட்டில் எத்தனை ஸ்மார்ட்போன்கள் மற்றும் DTH இணைப்புகள் உள்ளன, பணியிடத்திற்கு செல்ல மெட்ரோ ரயில் பயன்படுத்துகிறீர்களா, தினசரி பயணத்தில் எத்தனை மணி நேரம் செலவிடுகிறீர்கள் போன்ற கேள்விகளும் கேட்கப்பட உள்ளன.


Next Story

மேலும் செய்திகள்