19 நிமிடத்தில் 52 செய்திகள்... மாலை தந்தி செய்திகள் | Thanthi Evening News | Speed News (04.04.2023)

x
  • அருணாச்சல பிரதேசத்தில் உள்ள 11 இடங்களின் பெயர் மாற்றப்பட்டிருப்பதாக சீனாவின் வெளியுறவுத்துறை அறிவிப்பு வெளியிட்டு, அத்துமீறலில் ஈடுபட்டுள்ளது. அருணாச்சல பிரதேசத்தில் உள்ள ஐந்து மலைகள், இரண்டு நிலப்பரப்பு, இரண்டு குடியிருப்பு பகுதிகள் மற்றும் இரண்டு ஆறுகளுக்கு சீனா புதிதாக பெயரிட்டுள்ளது. இதற்கு முன்பும் இது போல் இரு முறை அருணாச்சல பிரதேசத்தில் உள்ள 21 இடங்களின் பெயர்களை சீனா மாற்றி அறிவித்திருந்தது.

  • வேளாண் பாதுகாப்பு மண்டலத்தில் சுரங்கங்கள், ஹைட்ரோ கார்பன் என எந்த திட்டமாக இருந்தாலும் செயல்படுத்த அனுமதிக்க மாட்டோம் என வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக சட்டம் இயற்றப்பட்டுள்ள நிலையில், விவசாயிகள் அச்சப்பட வேண்டிய அவசியம் இல்லை எனவும், சுரங்கங்களை தடை செய்ய முதலமைச்சர் ஸ்டாலின் உறுதியாக உள்ளதாகவும் குறிப்பிட்டார்.
  • தூத்துக்குடி அரசு மருத்துவமனையில், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த ஒருவர் உயிரிழந்தார். பாத்திமா நகர் பகுதியை சேர்ந்த 54 வயதான பார்த்திபனுக்கு கடந்த 23ஆம் தேதி கொரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில், அதிகாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

  • ராகுல் காந்தி மீதான தகுதிநீக்க நடவடிக்கையை கண்டித்து வரும் 8-ம் தேதி மாவட்டத் தலைநகரங்களில் உள்ள மத்திய அரசு அலுவலகங்கள் முன் போராட்டம் நடைபெறும் என தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி தெரிவித்துள்ளார். கோயம்பேடு பகுதியில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு பிறகு பேசிய அவர், வரும் 15 ஆம் தேதி மாநிலம் முழுவதும் ரயில் மறியல் போராட்டம் நடத்தப்பட உள்ளதாக குறிப்பிட்டார்.

  • டைரி மில்க் சாக்லேட்டில் புழு இருந்ததாக வீடியோ வெளியானது குறித்து, உளுந்தூர்பேட்டையில் உள்ள மளிகை கடையில், உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். முறையாக பராமரிக்காமல் இருந்த 25 சாக்லேட்டுகளை பறிமுதல் செய்த அதிகாரிகள், குளிர்சாதன பெட்டியில் சாக்லேட்கள் வைக்கப்படுகின்றனவா?, காலாவதியான சாக்லேட் விற்பனை செய்யப்படுகிறதா? என்பது குறித்து சோதனை செய்தனர்.

Next Story

மேலும் செய்திகள்