"அடுத்த வருசம் CSK அணியில நான் இல்லாவிட்டாலும்.." - சுற்றிவளைத்து சொன்ன தோனி

x

சென்னை அணியுடன் எப்போதும் இணைந்து இருப்பேன் என தோனி கூறி உள்ளார்.

குஜராத் உடனான போட்டியில் வெற்றி பெற்ற பிறகு பேட்டி அளித்த தோனியிடம், அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடரில் விளையாடுவீர்களா என கேட்கப்பட்டது. இதற்கு பதில் அளித்த தோனி, அடுத்த ஆண்டு மீண்டும் ஆடுவேனா என்பது குறித்து தற்போது யோசிக்கவில்லை என்றும், அது பற்றி முடிவெடுக்க இன்னும் 8-9 மாதங்கள் இருக்கின்றன என்றும் கூறினார். இப்போதே அதைப்பற்றி சிந்தித்து தலைவலியை ஏன் ஏற்படுத்திக் கொள்ள வேண்டும் என கேள்வி எழுப்பிய தோனி, வீரராகவோ அல்லது அணி நிர்வாகத்துடனோ சென்னை அணியுடன் எப்போதும் இணைந்து இருப்பேன் என தெரிவித்தார்.Next Story

மேலும் செய்திகள்