பத்மாவதி தாயாருக்கு அனுப்பப்பட்ட ஏழுமலையான் கோயில் பூஜை பொருட்கள் | Tirupati
திருச்சானூர் பஞ்சமி தீர்த்தத்தை முன்னிட்டு பத்மாவதி தாயாருக்கு ஏழுமலையான் கோவிலில் இருந்து மங்கள பொருள்கள் திருச்சானூருக்கு கொண்டு செல்லப்பட்டன.
பஞ்சமி நாளன்று பத்மாவதி தாயார் திருச்சானூரில் உள்ள கோயில் பத்மாசரோவத்தில் அவதரித்ததாக நம்பப்படுகிறது. இதை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் ஏழுமலையான் கோயில் தேவஸ்தானம் சார்பில் பூஜை செய்யப்பட்ட மங்கள பொருள்கள் அனுப்பி வைக்கப்படுவது வழக்கம்.
அதன்படி, பட்டாடைகள், மங்கள பொருள்கள், லட்டு பிரசாதம் உள்ளிட்டவை திருச்சானூருக்கு அனுப்பி வைக்கப்பட்டன. மேலும், இன்று கோயில் திருக்குளத்தில் பஞ்சமி தீர்த்த உற்சவம் நடைபெற உள்ளது.
Next Story
