சோழிஸ்வரர் கோவில் குடமுழுக்கு விழா - தீர்த்த குடம் எடுத்து வந்த பக்தர்கள்

கோபிசெட்டிபாளையம் அருகே, அகிலாண்டேஸ்வரி உடனமர் சோழீஸ்வரர் சாமி கோவிலில், தீர்த்தகுடம் எடுத்து வருதல் நிகழ்ச்சி, வெகு விமர்சையாக நடைபெற்றது.

ஈரோடு மாவட்டம் அளுக்குளியில் அமைந்துள்ள இந்த கோவிலில், பிப்ரவரி 1ம் தேதி குடமுழுக்கு விழா நடைபெறுகின்றது.

இதனை முன்னிட்டு, ஏராளமான பெண்கள் தீர்த்த குடம், முளைப்பாரி எடுத்துச் சென்றனர்.

இதனிடையே, தீர்த்த குட ஊர்வலத்தில், பாடலுக்கு ஏற்ப குதிரைகள் நடனமாடியது, பக்தர்களின் கவனத்தை ஈர்த்தது.

X

Thanthi TV
www.thanthitv.com