வழித்தடம் மாறி வேறு பஸில் ஏறிய பயணி.. "படிக்கத்தான் போறியா இல்ல.. வேற...?".. தரக்குறைவாக பேசிய ஓட்டுநர், நடத்துநர் - தீயாய் பரவும் வீடியோ

x

ஈரோடு மாவட்டம் அந்தியூரில் வழித்தடம் மாறி வேறு பேருந்தில் ஏறிய பயணியை ஓட்டுநரும், நடத்துநரும் வசைபாடிய வீடியோ சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது. சம்பந்தப்பட்ட ஓட்டுநர், நடத்துநர் மீது நடவடிக்கை எடுக்க கோரி பாதிக்கப்பட்ட பயணி அந்தியூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அவர்கள் இருவர் மீது துறைரீதியில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்